செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (09:43 IST)

இன்று முதல் முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி! புதிய தடுப்பூசி கொள்கை அமல்!

இன்று முதல் பிரதமர் மோடி அறிவித்த புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வருவதை அடுத்து இணையதளங்களில் முன்பதிவு செய்யாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இணையதளங்களில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த முன்பதிவில் எந்த மருத்துவமனையில் எந்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவல் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் இணையதளங்களில் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து புதிய தடுப்பூசி கொள்கை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் ஜூன் 21 முதல் முன்பதிவு இல்லாமலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது 
 
இதன்படி இன்று முதல் இணைய தளங்களில் முன்பதிவு செய்யாமலேயே நேரடியாக ஆதார் அட்டை உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்