திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (08:22 IST)

தனித்து விடப்படுகிறதா பாஜக! தமிழகத்தில் பூஜ்யமாக வாய்ப்பு!

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து குறைந்தது பத்து தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று அதிமுக தலைவர்களின் பேச்சு பாஜக மேலிடத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாஜகவுடன் கூட்டு இல்லை என்ற வகையில் நேற்று அமைச்சர் ஜெயகுமார், தம்பிதுரை எம்பி ஆகியோர் கடுமையான விமர்சனம் செய்துள்ளதால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு என்றே கணிக்கப்படுகிறது. தேர்தலுக்குள் தினகரன் கட்சியை இணைத்து கொள்வது மற்றும்  தமாக, பாஜக, தேமுதிக, பாமக, ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது ஆகிய ஆலோசனையில் அதிமுக மேலிடம் இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் பாஜக தனித்துவிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே தமிழகத்தில் மிகக்குறைந்த வாக்கு சதவிகிதத்தை வைத்துள்ள பாஜக தனித்து போட்டியிட்டால் நிச்சயம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இதனால் பாஜக கடைசியாக நம்பியிருக்கும் ஒரே ஆயுதம் ரஜினி தான் என்றும், அவரும் காலைவாரிவிட்டால் அதோகதிதான் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.