1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (19:25 IST)

தியேட்டர்களில் இனிமேல் டிரைலர் ஒளிபரப்பாகுமா? -திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளில்  கடந்த 5 ஆம் தேதி  மாலை சன் டிவி யூடியூப்  பக்கத்தில்  வெளியாகியானது.

இந்த டிரைலர் சென்னை ரோகினி தியேட்டரில் சிறப்பு காட்சியாக   கடந்த 5 ஆம் தேதி  திரையிடப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.   லியோ டிரைலர் 6:30 மணிக்கு ரிலீசான நிலையில் லியோ டிரைலர் சிறப்பு காட்சியின் போது ரோகிணி திரையரங்கில் இருக்கைகளை விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தினர்.

இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலானது.  

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு,  ரசிகர்களுக்கு முறையாக அனுமதி வழங்கி, கையாண்டிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற   நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  இனி தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியீடு இல்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் லியோ டிரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் அங்குள்ள இருக்கைகளை உடைத்துச் சேதப்படுத்தினர். இந்த நிலையில், தியேட்டர்களில் இனிமேல் டிரெய்லர்கள் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் இன்று முடிவு  செய்துள்ளனர்.