வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (17:12 IST)

நக்கீரன் கோபால் கைதுக்கும் பாஜக-விற்கும் தொடர்பில்லை- இளைஞரணி மாநில தலைவர் பேட்டி

நக்கீரன் கோபால் என்பவர் நல்ல பத்திரிக்கையாளரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் எழுதி வருகிறார் என தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் கரூரில் பேட்டியளித்துள்ளார்.

 
கரூரில், பா.ஜ.க கட்சியின் பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்., தமிழக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ்.பி.செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அவர்., தமிழக அளவில் ஆங்காங்கே 67654 வாக்குசாவடிகள் மற்றும் பூத்துகளுக்கு இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டும், மத்திய பா.ஜ.க அரசின் 4 ½ ஆண்டுகள் சாதனைகளை மக்களிடையே பரப்பபட்டும், கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மேலும், வரப்போகும் நாடாளுமன்றத்தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, நாங்கள் (பா.ஜ.க இளைஞரணி) தயாராகி வருகின்றோம். 
 
அதனடிப்படையில், எங்களின் முதற்கூட்டம் கரூரில் நடைபெற்று வருகின்றது என்றும் அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெறும், மீண்டும், பிரதமர் மோடி தான் பிரதமர் ஆவார், ஆகவே, தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து மக்கள் மோடியை, பிரதமர் ஆக்குவார்கள் என்றார். 
 
மேலும், நக்கீரன் கோபால் கைதிற்கும், பா.ஜ.க விற்கும் சம்பந்தமில்லை, அவரை கைது செய்தது, தமிழக அரசு, தமிழக காவல்துறை என்றார். மேலும், நக்கீரன் கோபால் ஆதரமற்ற, செய்திகளை வெளியிட்டு, வருகின்றார். சுதந்திரம் இருக்கு என்பதற்காக, நல்ல பத்திரிக்கையாளர்களின் பெயரையும் கெடுக்கும் வகையில் நக்கீரன் கோபால் நடந்து வருகின்றார் என அவர் கூறினார். 
 
பேட்டி : வினோஜ் பி.செல்வம் – தலைவர் – தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவர்  

- சி. ஆனந்த குமார்