திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (20:46 IST)

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி: என்எல்சி அறிவிப்பு

neyveli
கொரோனா தொற்றால்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக நெய்வேலி என்எல்சி கம்பெனி அறிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு வருடங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா  வைரசால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் என்.எல்.சியில் பணிபுரிந்து கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிரந்தர பணி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது 
 
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த 74 குடும்பத்தினருக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது