புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (07:27 IST)

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய சென்னை உள்பட பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
நேற்று இரவு முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார், அனகாபுத்துார், அசோக்நகர், நந்தனம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் சென்னை அசோக் நகரில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்த்தாலும் சென்னை பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. எனவே சென்னை பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது