1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:28 IST)

வேகமெடுத்த நிவர்: 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

நிவர் புயல் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ.ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது.
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி சற்று முன்னர் புயலாக உருவாகி தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ.ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது. புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.