வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (21:39 IST)

கர்நாடக மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு  ஒமிக்ரான் தொற்றைக் குறைக்க இரவு   நேர ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் கர்நாடக மாநிலத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டடுள்ளது.

தென்னாப்பிரிககவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப்  பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக  நாடுகளுக்குப் பரவிய கொரொனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரொனா 3 வது அலை விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக  நிபுணர்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  கர்நாடக மா நிலத்தில் நாளை முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை இரவு  நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.