வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (10:57 IST)

கோவை, நாகூர், தூத்துக்குடி.. தொடர்ந்து சோதனை நடத்தும் என் ஐ ஏ

தமிழகத்தில் கோவை, நாகூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களை கைது செய்து விசாரித்தும் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த சமீர் என்பவரது வீட்டிலும், சவுரதீன் என்பவரது வீட்டிலும் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாகையிலும், காயல்பட்டினத்திலும் தொடர்ந்து ஐ என் ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.