தேர்தல் நேர பரபரப்பில் மீண்டும் சோதனை செய்யும் என்ஐஏ .. சென்னையில் பரபரப்பு..!
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் அவ்வப்போது அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் இன்று சென்னையில் உள்ள சில முக்கிய பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக சென்னை மண்ணடியில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருவதாகவும் மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் மண்ணடி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு பிரபலத்தின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும் சோதனையின் முடிவில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தேர்தல் பரபரப்பில் அரசியல்வாதிகள் இருக்கும் நிலையில் பிரபலங்களின் வீடுகளில் திடீரென என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva