சாட்டை துரைமுருகன் மனைவியிடம் 3 மணி நேரம் விசாரணை.. என்.ஐ.ஏ அதிரடி
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சாட்டை துரைமுருகன் மனைவியிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 மணி நேரம் தொடர் விசாரணை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் தமிழக முழுவதும் இன்று காலை முதல் அதிரடியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சாட்டை துரைமுருகன் வீட்டில் செய்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசி இடம் 3 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்தனர். மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி சாட்டை துரைமுருகன் நேரில் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் திடீர் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ம
Edited by Mahendran