செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (15:40 IST)

தொடரும் நெய்வேலி ஊழியர்களின் போராட்டம்

நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

 
இன்று 25ஆவது நாளாக அவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொ.மு.ச. தலைவர் திருமாவளவனை என்.எல்.சி. நிர்வாகம் பணி நீக்கம் செய்வதாக நோட்டீசு ஒட்டியது. இதனால் என்.எல்.சி.யில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 
என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து திருமாவளவன் பணி நீக்கம் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நீடிக்கிறது.
 
போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக நேற்று தொ.மு.ச. அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைத்த ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இதில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (14ஆம் தேதி) காலை நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள காமராஜர் சிலை அருகே சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.