செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (13:30 IST)

திருமணமான 4 மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை: பெருங்களத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

திருமணமான நான்கே மாதத்தில் புதுமண தம்பதிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் செய்த இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஐடி ஊழியரான காயத்ரி என்பவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காயத்ரி திடீரென மனம் உடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அதிர்ச்சியில் கணவரும் அதே அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
திருமணமாகி நான்கு மாதங்களே ஆகி உள்ள நிலையில் இருவரும் ஒரே அறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து தாம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran