Daily Horoscope
✕

நெல்லை மேயர் சரவணன் பதவி தப்பியது.! கைவிடப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம்!!

Written By Senthil Velan
Updated: வெள்ளி, 12 ஜனவரி 2024 (12:05 IST)
நெல்லை மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் கைவிடப்பட்டதாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
 
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், திமுகவினர் 44 வார்டுகளிலும், அவர்களது கூட்டணிக் கட்சியினர் 7 வார்டுகளிலும் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள், கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் பதவிக்கு வந்தவர்கள். எனவே, அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர்.  மேயர் சரவணன் பதவிக்கு வந்த பிறகு, அவருக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 
 
இவர்களுடைய மோதல் போக்கால் எம்எல்ஏ ஆதரவு திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் ஒருவர் கூட வராததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது என நெல்லை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதால், நெல்லை மேயராக சரவணன் தொடர்வார் என அவர் கூறினார்.
ALSO READ: தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் கோரிய மனு தள்ளுபடி.! வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!
மேயர் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய திமுக கவுன்சிலர்களிடம் ஓரிரு நாட்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காததால் சரவணனின் மேயர் பதவி தப்பியது.

எல்லாம் காட்டு

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியா? அபிஜீத் தீப்கே விளக்கம்...

தீபமேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

பேச்சுக்கு சொன்னத உண்மையாவே ஹனிமூன் பீரியட்னு நினைச்சிட்டாங்க!.. உதயநிதி நக்கல்..

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அருள் விக்னேஷ்? - நடப்பது என்ன?..

அருள் விக்னேஷுக்கு சம்மன்.. விரைவில் விசாரணையில் ஆஜர்..

அடுத்த கட்டுரையில்
Show comments