1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (08:49 IST)

ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்: நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, தினகரன் அணி என மாறி மாறி அரசியல் செய்து வரும் நாஞ்சில் சம்பத் தற்போது அரசியல் துறவியாக எந்த கட்சியிலும் சேராமல் ஒதுங்கி உள்ளார். இருப்பினும் அவர் விரைவில் வைகோவின் மதிமுகவில் மீண்டும் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பதில் கூறிய நாஞ்சில் சம்பத், 'ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார். அறிவார்ந்த ரீதியில் அவரால் பயணிக்க முடியாது என்பது ஏற்கெனவே நான் அனுமானித்ததுதான். ஆனால், உரிமைக்குப் போராடுகிறவனின் வியர்வையைக் கொச்சைப்படுத்துகிற அநியாயத்தைச் செய்கிற ஒரு பூர்ஷுவாவாக இவர் அவதாரம் எடுப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. திரையுலகம் என்ற பிம்பத்தில் இருந்துகொண்டு, தான் சொல்லுகிறதெல்லாம் வேதம் என்று கருதிக்கொள்கிற ரஜினிகாந்த், தமிழகத்தின் தட்ப வெட்பத்துக்கு ஏற்ற தலைவன் அல்ல! என்று கூறியுள்ளார்.
 
நாஞ்சில் சம்பத்தின் இந்த பேட்டியால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாஞ்சில் சம்பத்தை சமூக வலைத்தளங்களில் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.