வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (08:25 IST)

டோல்கேட் கட்டணமேக் கட்டாத நாம் தமிழர் தம்பி – எப்படி தெரியுமா ?

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் பலமுறை சுங்கச்சாவடியில் கட்டணமே கட்டாமல் சென்றதாக பெருமையாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் இப்போது சுங்கவரிகள் அதிகமாக வசூலிக்கப்படுவதாக இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரபாகர் என்ற ஒருவர் அந்த கட்சிப் பக்கத்தில்  ‘பலமுறை சுங்கச்சாவடியை கடந்தும் ஒருமுறை கூட சுங்கவரி கட்டியது கிடையாது. காரணம் பைக்ல இருக்கும் அண்ணன் சீமான் படம், எவனுக்கு தைரியம் வரும் வசூல் செய்ய… நாம் தமிழர்….’ என தன்னைப் பற்றி தானே பெருமைப் பட்டுக்கொண்டுள்ளார்.

அதற்குக் கீழே பதிலளித்துள்ள மற்றொரு நாம் தமிழர் தம்பி ‘உறவே இரு சக்கர வாகனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது’ எனத் தெரிவித்துள்ளார். இந்த ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.