வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 மே 2020 (07:54 IST)

ஆன்லைனிலும் மது விற்க கூடாது: நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு

ஆன்லைன் முறையில் தமிழகத்தில் மது விற்பனைக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தில் மது விற்பனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைனில் மட்டும் மதுவிற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது
 
இந்த நிலையில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது ஆன்லைனில் மது விற்பனை ஜோராக நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
உணவு சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் மது விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை அரசுக்கு அதிர்ச்சி அளித்திருக்கும் என கருதப்படுகிறது