திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (21:38 IST)

ஜப்பான் நாட்டுக் கடற்கரையில் மர்ம பந்து....அதிகாரிகள் ஆய்வு

jappan
ஜப்பான் நாட்டுக் கடற்கரையில் மர்ம பந்து ஒன்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் பிரதமர், ஃபுமியோ கிசிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நாட்டின் தலை நகரான டோக்கியோவில் இருந்து சுமார் 155 மைல் தூரத்தில் உள்ள ஹமாமட்சு என்ற பகுதி.

இப்பகுதியில்,கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கடற்கரையில் ஒரு மர்மமான பொருள் இருப்பதைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் போலீஸிற்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அந்தப் மர்மப் பொருள் இருக்கும் இடத்தைச் சுற்றி சீல் வைத்து, அந்த மர்மான பெரிய பந்து போன்ற பொருளை ஆய்வு செய்தனர்.

அது, சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட உலோகத்தால் ஆனது என்றும், துருப்பிடுத்துள்ள இந்த மர்மப் பந்தை ஆய்வு செய்ததில் உள்ளே  வெற்றிடம் இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதற்குள் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை என்பாதல், அபாயமில்லை என்று  அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.