ஊடகத்துறை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் - கமல்ஹாசன் ’டுவீட்’
கொரோனா பாதிப்பிலிருந்து தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார் , அமைச்சர்கள் என பலரும் இடையயராது உழைத்து வருகின்றனர். இந்த உலக நிலவரத்தையும், நாட்டு நிலவரத்தையும் உண்மை தகவலையும் மக்களுக்கு கொண்டு செல்லும் அத்துணை ஊடகத்துறைக்கு கமல்ஹாசன் தனது நன்றிகலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
’’ஊரடங்கு நேரத்தின் போதும், உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உழைக்கும் அத்தனை ஊடகத்துறை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வதந்திகள் பரவிடாமலும், சரியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உங்கள் பணி மகத்தானது. உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ’’என தெரிவித்துள்ளார்.