செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (15:17 IST)

Ground Report:: தமிழகத்தில் முதல் தடுப்பூசி போட்டு கொண்ட பெண் இவர்தான்!

தமிழகத்தில் முதல் தடுப்பூசி போட்டு கொண்ட பெண் இவர்தான்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பதும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே 
 
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது என்பதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தடுப்பூசியை போடும் நடவடிக்கையை தொடங்கி வைத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர் முத்துமாரி என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முத்துமாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் உள்ள அனைவரும் பயமின்றி கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு பயம் ஏற்பட்டால் நானே கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக் கொள்ள தயார் என்றும் ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது