1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (15:33 IST)

சோ சாரி... ரஜினியை சந்தித்த முரசொலி ஆசிரியர்

நடிகர் ரஜினியை பற்றி கடுமையாம விமர்சித்து கட்டுரை எழுதிய முரசொலி ஆசிரியர் ரஜினியை சந்தித்து பேசிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

 
ரஜினி சில தினங்களுக்கு முன்னால் ’நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள். மேலும் இத்தனை வருடங்கள் மன்றத்திற்காக உழைத்ததினால் மட்டுமே ஒருவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.’ என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
இந்த அறிக்கையைக் கேலி செய்யும் விதமாக ரஜினி ரசிகன் ரஜினியிடம் கேள்வி கேட்பது போல ஒரு செய்தியை நேற்று முன்தினம் முரசொலி வெளியிட்டிருந்தது. அதில் ‘மன்றத்திற்காக இத்தனை வருடங்கள் உழைத்த தங்களின் உண்மையான ரசிகர்கள் நியாயமானப் பதவிக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? தாங்கள் மட்டும் இத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்ததால் மட்டுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?. பதவிக்காக அரசியல் இல்லை எனில் பெரியார் போல கொள்கைக்காக கட்சி ஆரம்பித்து இயக்கமாக செயல்படவேண்டியதுதானே?’ எனக் கேள்வியெழுப்பி இருந்தது.
 
இதையடுத்து நேற்று முன்தினம் திடீரென தனது ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினி. ஆலோசனைக்குப் பின் தன்னையும் ரசிகர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என மற்றொரு அறிக்கையும் வெளியிட்டார்.

 
ஆனால் இன்று திடீரென ரஜினி பற்றிய அந்த செய்திக்காக வருத்தம் தெரிவித்து இன்றைய முரசொலியில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்படுகிறது.’ என முரசொலியின் ஆசிரியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அந்த கட்டுரை எழுதியவர் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக செய்தியும், அது தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில், அந்த ஆசிரியர் செய்த தவறுக்கு வருந்தி அழுகிறார். அவரை ரஜினி தேற்றுகிறார். இந்த புகைப்படம் எப்படியோ சமூக வலைத்தளங்களில் கசிந்து விட்டது.