திங்கள், 20 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:17 IST)

காகித ஆலை நிறுவனத்தின் முன்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம்

karur
கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் முன்பு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம்.
 
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிர்வாகத்தில் 10 வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காதது கண்டித்தும், மீதமுள்ள 50% FDA வழங்காததை கண்டித்தும், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் காலம் முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் தேர்தல் நடத்தாததை கண்டித்தும் காகித ஆலையில் ( UNIT 1 /UNIT 2)  உள்ள பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கண்ணன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.