செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:17 IST)

சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடல்! தொண்டர்கள் அஞ்சலி!

காங்கிரஸ் எம்பி வசந்தகுமாரின் உடல் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்காக சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று காலை தகவல் வெளியானது.  இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 70 வயதான கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் காலமான தகவல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து காலை முதல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.