1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (18:06 IST)

பாலியல் டார்ச்சர் கொடுத்த மருமகன்.. சுடுதண்ணி ஊற்றி கொலை செய்த மாமியார்..!

பாலியல் டார்ச்சர் கொடுத்த மருமகனை சுடுதண்ணி ஊற்றி மாமியார் கொலை செய்த சம்பவம் திருவெறும்பூர் அருகே நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவெறும்பூர் அருகே பாரதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் செல்வராஜ் சமீபத்தில் டயானா மேரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவர் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் குடி பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் குடித்துவிட்டு வந்து மாமியாரிடம் பாலியல் தொல்லை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த மாமியார் இன்னாசி அம்மாள் மற்றும் மகள் டயானாஆகிய இருவரும் கடந்த ஐந்தாம் தேதி சுடுதண்ணீரை செல்வராஜ் மீது ஊற்றி அதற்கு மேல் மிளகாய் பொடியையும் ஊற்றி உள்ளனர். 
 
இதில் செல்வராஜி உடல் முழுவதும் வெந்துள்ள நிலையில் அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சையின் பலன் இல்லாமல் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து திருவெறும்பூர் போலீசார் மாமியார் மற்றும் மருமகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
 
Edited by Mahendran