திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:57 IST)

மாமியாரைக் கடித்த மருமகள் – தலையில் 6 தையலோடு மருத்துவமனையில் அனுமதி !

பொள்ளாச்சியில் தன் மேல் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காத மாமியாரை தலையில் கடித்துள்ளர் ஒரு மருமகள்.

பொள்ளாச்சி மாவட்டம் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி. பத்திரப்பதிவராக பணியாற்றும் இவரது மகன் சரவணக்குமார் மற்றும் மருமகள் கல்பனா. கல்பனாவும் சரவணனும் தனியாக வசித்து வரும் நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதும் அதனால் கோபித்துக்கொண்டு சரவணக்குமார் தன் தாய் வீட்டுக்கு வந்து தங்குவதும் வாடிக்கையாக இருந்துள்ளார்.

இது சம்மந்தமாக மாமியார் நாகேஸ்வரிக்கும் கல்பனாவுக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இது சம்மந்தமாக நடந்த தகராறு ஒன்றில் கல்பனா தன்னைத் தாக்கியதாக நாகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை வாபஸ் வாங்குமாறு கல்பனா நாகேஸ்வரியை வற்புறுத்தியுள்ளார். நாகேஸ்வரி மறுக்க இது சம்மந்தமாக நடந்த வாக்குவாதத்தில் கோபமான கல்பனா நாகேஸ்வரியை தலையில் கடித்துள்ளார். இதில் நாகேஸ்வரியின் தலையில் ஆழமானக் காயம் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல் போடப்பட்டுள்ளது.