கிராம தலைவர் பதவிக்கு மாமியார் மற்றும் மருமகள் போட்டி: ஒன்றாக வந்து மனுதாக்கல்!
கிராம தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் போட்டியிடுவதாகவும் அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வந்து மனு தாக்கல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே நாம் தமிழர் கட்சி, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த நிலையில் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு என்ற கிராமத்தின் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் போட்டியிடுகின்றனர். இருவரும் ஒன்றாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்து மனு தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது