புதன், 25 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (09:33 IST)

எடப்பாடியை விட்டுப்பிடிக்கும் மோடி: ஜூலைக்கு அப்புறம் சுய ரூபத்தை காட்டுவாராம்!

எடப்பாடியை விட்டுப்பிடிக்கும் மோடி: ஜூலைக்கு அப்புறம் சுய ரூபத்தை காட்டுவாராம்!

அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும், பிரதமர் மோடியே இதற்கு பின்னணியில் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தொடக்கத்தில் எடப்பாடி அணி மீது கோபத்தை காட்டிய பாஜக தற்போது கொஞ்சம் விட்டுப்பிடிப்பதாக கூறப்படுகிறது.


 
 
தமிழகத்தில் அதிமுகவின் துணை மூலம் மட்டுமே பாஜக ஓரளவுக்கு காலூன்ற முடியும் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் பாஜக மேலிடம் பிளவுபட்டிருக்கும் அதிமுகவை இணைத்து தங்களுக்கு விசுவாசமாக வைக்க முயற்சித்து வருகிறது.
 
எடப்பாடி அணி தங்களுக்கு விசுவாசம் காட்டினாலும் அந்த அணி இன்னமும் சசிகலா குடும்பத்தின் பிடியில் தான் உள்ளது என்பதையும் ஓபிஎஸுக்கு தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்பதையும் மோடி தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்.
 
எனவே தற்போது எடப்பாடி அணி மீது தங்கள் நடவடிக்கையை காட்டினால் அது ஜூலை மாதம் வரும் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவை இழக்கும் வைகையில் அமைந்துவிடும் என்பதால் அதுவரை விட்டுப்பிடிப்போம் என்ற மனநிலையில் உள்ளாராம் மோடி.
 
ஜூலை மாதத்துக்கு அப்புறம் முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களின் பழைய கணக்கு வழக்குகளை மோடி தூசு தட்ட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்களே தங்கள் திட்டப்படி ஓபிஎஸிடம் ஆட்சியை கொடுத்துவிடுவார்கள் என்பதே மோடியின் கணக்கு என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.