புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (22:52 IST)

பாஜக யின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக மோடி கபாடி லீக்

modi league
பாரதப் பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி யின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக கரூர் மாநகரில் மோடி கபாடி லீக் என்ற கபடி போட்டி நடைபெறுகிறது.
 
 
17.09.2022 மற்றும் 18.09.2022 தேதிகளில இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 84 அணிகள் பங்கு பெறுகின்றன.
 
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 50,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 25000, நான்காம் பரிசாக ரூபாய் 25,000 வழங்கப்படுகிறது.
 
 
இப் போட்டியை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் "ஆற்றல் மிகு செயல் வீரர்" V.V. செந்தில்நாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.
 
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத், ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் தலித் பாண்டியன், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.