1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 30 மார்ச் 2024 (15:07 IST)

மோடி மீண்டும் கேட்கிறார் ஊழலை ஒழிக்க ஒருமுறை கூட வாய்ப்பளியுங்கள் என்று -அமைச்சர் கிண்டல்

MANO THANGARAJ
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,  பிரதமர் மோடி, சமீபத்தில் தமிழ் நட்டின் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு, ஊழல் நிலவுவது கவலை அளிக்கிறது. மக்களுக்கு புதுப்புது பிரச்சனைகளை  உருவாக்குவதுதான் திமுக அரசின் பணியாக உள்ளது என்று தெரிவித்தார்.
 
இதற்குப் பதிலாக திமுக அமைச்சர் மனோ தங்கராஜ், தன் வலைதள பக்கத்தில்,'' உலகமே சிரிக்கிறது நாமும் சிரிப்போமா !  உலகின் மிகப்பெரிய தேர்தல் பத்திர ஊழல்-ரூ.8251 கோடி CAG-அறிக்கை குறிப்பிட்டுள்ள 7.5 லட்சம் கோடி ஊழல் ரஃபேல் ரக போர் விமானம் வாங்கியதில் பல கோடி ஊழல்,  PM CARE நிதி ஊழல்.... மோடி மீண்டும் கேட்கிறார் ஊழலை ஒழிக்க ஒருமுறை கூட வாய்ப்பளியுங்கள் என்று’’ என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ’’ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்று துவங்கினார் பிரதமர் மோடி; 10 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் என்ற நிலையில் வந்து நிற்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.