வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (18:01 IST)

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து அதிமுக, திமுகவுக்கு இடியை இறக்கிய மோடி!

500, 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து அதிமுக, திமுகவுக்கு இடியை இறக்கிய மோடி!

புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கையில் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றலாம் என பிரதமர் மோடி அறிவித்தார்.


 
 
இந்த அறிவிப்பு கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கும் என கூறப்படுகிறது. இதனால் கருப்பு பண முதலைகள், கருப்பு பணம் வைத்துள்ள அரசியல்வாதிகள் என பலரும் அச்சத்தில் உள்ளனர். பிரதமர் மோடியின் இந்த முடிவை பலரும் வரவேற்கின்றனர். அதே நேரத்தில் எதிர்ப்பும் வருகின்றன.
 
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியின் இந்த திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து பேசிய  அவர் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தார்.
 
அதில், மோடி அறிவித்த இந்த அறிவிப்பு நடைபெற இருக்கிற மூன்று தொகுதிகளுக்கும் பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க வாய்புள்ளது. ஆனால், இதை எப்படி சமாளிப்பது என்று அதிமுகவினரும் திமுகவினரும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். அதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். ஓட்டுக்கு திமுக சார்பில் ரூ.500ம், அதிமுக சார்பாக ரூ.1000ம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரிய இடியாக அமைந்துள்ளது என்றார்.