ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2024 (07:35 IST)

காலை 10 மணிக்குள் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 
அதன்படி, இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
சென்னையை பொருத்தவரை, மாலை நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva