1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (10:00 IST)

அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபை தயார்: யார் யார் கலந்து கொள்கின்றனர்.

தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபைக்கு இனிமேல் திமுக எம்.எல்.ஏக்கள் செல்ல மாட்டார்கள் என்று நேற்று திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து இன்றுமுதல் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டடசபை நடைபெறும் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடத்தப்பட உள்ள போட்டி சட்டசபைக்கான அரங்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் இந்த போட்டி சட்டசபையில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் திமுகவினர் அறிவித்துள்ளனனர்.
 
இந்த போட்டி சட்டசபை கூட்டத்தில் முதலில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் போட்டி சட்டசபை நிகழ்வுகள் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்த போட்டி சட்டசபையில் திமுகவின் தோழமை கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. அவர்கள் போட்டி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்களா? அல்லது உண்மையான சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்கின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்