ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி!? – மநீம – சமக பேச்சுவார்த்தை இழுபறி
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்த நிலையில் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
முன்னதாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி இந்த சட்டமன்ற தேர்தல் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சரத்குமார் தெரிவித்தார். அதை தொடர்ந்து மநீம – சமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படுவது குறித்து பேசியுள்ள நிலையில் சமகவின் ராதிகாவிற்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொகுதியில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், பதவிகள் அளிப்பதில் மநீம தயங்குவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது. இதனால் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.