புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:44 IST)

6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அறிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் விளக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ”பேரறிவாளன்‌ விடுதலையைத்‌ தொடர்ந்து - இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும்‌ விடுதலை செய்து உச்சநீதிமன்றம்‌ வழங்கி இருக்கும்‌ தீர்ப்பை வரவேற்கிறேன்‌. பேரறிவாளன்‌ வழக்கின்‌ தீர்ப்பை அடிப்படையாகக்‌ கொண்டு நளினி. இரவிச்சந்திரன்‌. ராபர்ட்‌ பயாஸ்‌. சாந்தன்‌. முருகன்‌. ஜெயக்குமார்‌ ஆகிய ஆறுபேரையும்‌. விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

மாநில அரசின்‌ அமைச்சரவை‌ தீர்மானத்தை ஆளுநர்‌ கிடப்பில்‌ போட்டு. வைத்திருந்தார்‌. அதற்கான அனுமதியை வழங்கத்‌ தொடர்ந்து அழுத்தம்‌ கொடுத்து வந்தோம்‌. மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்‌ தீர்மானங்களை. முடிவுகளை நியமனப்‌ பதவிகளில்‌ இருக்கும்‌ ஆளுநர்கள்‌ கிடப்பில்‌ போடக்கூடாது என்பதற்கு. உச்சநீதிமன்றத்தின்‌ இந்தத்‌ தீர்ப்பும்‌ ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக்‌ கோட்பாட்டிற்கு வரலாற்றுச்‌ சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K