செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (16:41 IST)

மீண்டும் ஒரு டிசம்பர் 15ஆ? ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் நேற்று இரவு முதலே சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்ததால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது
 
சென்னையின் முக்கிய சாலைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு நாள் மழைக்கே சென்னையின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று திமுக உள்பட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூறிய போது ’ஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சென்னையில் பேரிடர் மீட்பு பணி படையினரை நிறுத்தி போர்க்கால நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் 
 
மீண்டும் கடந்த 2015 டிசம்பர் போன்று வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முன்னேற்பாடுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்