செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (12:24 IST)

ஜோசிடர் பேச்சால் மகனை கொன்ற தந்தை! – மு.க.ஸ்டாலின் வேதனை

திருவாரூர் அருகே ஜோதிடத்தை நம்பி தந்தையே மகனை கொன்ற சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே உள்ள நன்னிலத்தில் எதிர்காலத்தில் மகனால் ஆபத்து வரலாம் என ஜோசியர் சொன்னதை நம்பி 5 வயது மகனை தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “மகனால் ஆபத்து நேரலாம் என ஜோதிடர் கூறியதால், நன்னிலத்தில் தனது 5 வயது மகனை தந்தையே எரித்துக் கொன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இனி நரபலிகளுக்கு இடம் தரக் கூடாது! மெய்ப்பொருள் காண்பது அறிவு - என்ற வள்ளுவரின் வரிகளை என்றும் மனதில் கொள்வோம்!” என கூறியுள்ளார்.