வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (08:47 IST)

“தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்” - மும்மொழிக் கொள்கை போராட்டம் வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

Stalin

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலமாக திமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “எனது பிறந்தநாளை நான் விமர்சையாக கொண்டாட விரும்புவதில்லை. எனது பிறந்தநாளில் கழகத் தொண்டர்கள் நற்காரியங்கள் செய்ய விரும்பினால் மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலான இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை குறித்து மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.

தற்போது நமது மும்மொழி எதிர்ப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களும் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக தொகுதிகளை குறைக்க மாட்டோம் என சொல்கிறார்களே தவிர, பிற மாநிலங்கள் தொகுதிகளை அதிகரிக்க மாட்டோம் என சொல்ல மாட்டேன்கிறார்கள்.

 

மக்கள் தொகையை காரணம் காட்டி பல காலமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சியடைந்துள்ள தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்க முயற்சிக்கிறது. ஆனால் அதை தமிழக மக்களும், திமுகவும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K