வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 18 மே 2014 (15:25 IST)

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலகல்

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் பதவி விலகுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
 
திமுக வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் தலையிட்டதாகவும், கூட்டணி முயற்சியில் ஈடுபடவில்லை என்றும், அதனால் திமுக தோல்வியை தழுவியதாகவும் புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக தோல்விக்கு பொறுப்பேற்று அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
 
இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மு.க.ஸ்டாலின் திமுக பொருளாளராகவும், இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார். மேலும், தேர்தல் பணிக்குழுவில் முக்கிய இடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.