புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:37 IST)

நாளை சமூக நீதி நாள்! கலைஞர் சிலை முன்பு உறுதியேற்கும் முதல்வர்!

நாளை பெரியாரின் பிறந்தநாளில் கலைஞர் சிலை முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிநாள் உறுதியேற்க உள்ளார்.

திராவிட இயக்கங்களில் தொடக்கத்திற்கு காரணமான பெரியாரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதிநாளாக கொண்டாட உள்ளதாக முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை பெரியார் பிறந்தநாளில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.