பாரத் நெட் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! – விரைவில் இணைய சேவை!
தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளுக்கும் இணைய சேவை கிடைப்பதற்கான அரசின் பாரத் நெட் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு இணைய வசதி வழங்கும் நோக்கில் பாரத் நெட் திட்டம் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கிராமபுற மாணவர்கள் இணைய வசதி பெறுவதோடு கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை அவர்கள் அடைய இது உதவும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரத் நெட் திட்டம் தமிழ்நாட்டில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.1,627 மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கன்னியாக்குமரி முத்தாலக்குறிச்சியில் கண்ணாடி இழை கம்பிகள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.