செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (10:42 IST)

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்! – அதிமுகவை விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் ஆட்சியமைத்து அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதம் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”பிப்ரவரி 26 முதல் மே 6 வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மார்ச் முதல் மே 7 வரை ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளுக்கு அதிமுகவே காரணம். திமுக ஆட்சிக்கு வந்தபோது தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என பற்றாக்குறை பல இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.