ஸ்விகியில் சம்பளம் குறைச்சிட்டாங்க.. என்னனு கேளுங்க! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
ஸ்விகி ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் சில மாதங்களாக உணவகங்கள் மூடப்பட்டது, ஊரடங்கு உத்தரவுகள் போன்றவற்றால் ஸ்விகி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்க தொடங்கியுள்ளன.
இதுகுறித்து ஸ்விகி ஊழியர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ” இன்று ஸ்விகி ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர். பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்!” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.