இதெல்லாம் அநியாயம்; சட்டவிரோதம்! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்களை சேகரிக்காத சிபிஐ குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட 32 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லாததால் 32 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம்! அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த BabriDemolitionCase-ல் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய CBI பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்!” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.