செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 11 மே 2016 (11:55 IST)

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு ஆயுள்; பெற்றோர் உட்பட 7 பேருக்கு சிறை

பதினெட்டு வயது பூர்த்தியடையாத சிறுமியை கடத்தி சென்று, கட்டாய திருமணம் செய்ததோடு, அவரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


 

 
ஈரோட்டில் வசிக்கும் பரமசிவம்(51) என்பவரின் மகன் யுவபிரகாஷ்(25). இவர் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்து வந்தார். இவர் 18 வயது பூர்த்தியடையாத ஒரு சிறுமியை திருமணம் செய்ய விரும்பினார்.
 
இதையடுத்து சென்ற ஆண்டு ஜனவரி மாதம், அந்த சிறுமி தனது உறவினர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த போது, யுவபிரகாஷ், தனது நண்பர்கள் சிலருடன் ஒரு வாகனத்தில் அங்கு வந்து, அந்த சிறுமியை கடத்திச் சென்றார்.
 
அதன்பின் அந்த சிறுமியை ஓலப்பாளையம் எனும் ஊரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின் கொடுமுடியில் உள்ள கோவிலில் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தாலி கட்டி திருமணம் செய்தார். இதற்கு யுவபிரகாஷின் பெற்றோர்களும் உடந்தையாய் இருந்தனர்.
 
அடுத்து, அந்த சிறுமியை விளக்கேத்தி எனும் ஊருக்கு அழைத்து சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்து யுவபிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். அதன்பின் மதுரையில் உள்ள துரைராஜ் என்பவரின் வீட்டில் 10 நாட்கள் அடைத்து வைத்திருந்தார்.
 
இதனிடையில், அந்த சிறுமியை காணவில்லை என்று அவரின் பெற்றோர்கள் சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், யுவபிரகாஷ் உட்பட   9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நேற்று நீதிபதி திருநாவுக்கரசு வழங்கினார்.
 
அதன்படி, யுவபிரகாஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதித்தார். அதேபோல் அவருக்கு உடைந்தையாய் இருந்த அவரின் பெற்றோர்கள் உட்பட 7 பேருக்கு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
 
இந்த வழக்கின் தீர்ப்பு ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்