திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:09 IST)

பயத்தை போக்க.. தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கர்!

இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால மருந்தாக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படுவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் முன்கள பணியாளர்களின் பயத்தை போக்க தான் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள இருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
 
அதன்படி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.