வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (07:40 IST)

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உண்டா? செந்தில் பாலாஜி

Senthil Balaji
தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டுமென ஏற்கனவே தமிழக அரசு கூறியுள்ளது என்றும் இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. 
 
இதனையடுத்து ஏராளமானோர் ன்லைன் மூலமும் மின்சார அலுவலகம் சென்றும் தங்களது மின் இணைப்பு ஆதார் அட்டையுடன் இணைத்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைத்தால் 500 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காது என்று ஒரு சிலர் வதந்தி கிளப்பி வருகின்றனர்
 
ஆனால் இது குறித்து விளக்கம் அளிக்க தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஒரே ஆதார் அட்டையில் ஐந்து இணைப்புகள் இருந்தாலும் பத்து இணைப்புகள் இருந்தாலும் அனைத்திற்கும் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் இது குறித்த எந்தவிதமான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva