மின் இணைப்பில் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிப்பா? – அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இணைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மக்களே ஆன்லைன் மூலமாக நேரடியாக எளிதாக இணைத்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு மின் இணைப்பு எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைத்து தரப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்ற முனைப்பில் மின்வாரியம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி “2.66 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில் இதுவரை 1.03 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. வருகிற 31ம் தேதி வரை எவ்வளவு மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கப்படும். அதை பொறுத்து பின்னர் முதல்வரிடம் பேசிவிட்டு கால அவகாசம் நீட்டிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Edit By Prasanth.K