வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:13 IST)

ஜெய்ஸ்ரீ ராம், அரோகராவை ஏற்றுக்கொள்வோம்: அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு பதிலடி..!

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் முருகனுக்கு அரோகரா என சொல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம். கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.
 
முருகன் மாநாடு பொதுவானது. இந்த மாநாட்டிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்கிறோம். இதையே வரவேற்பாக ஏற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கலாம்.
 
மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள். மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்’ என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
 
Edited by Mahendran