அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை! – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை முதன்மைபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பது, குமரி வள்ளுவர் சிலைக்கு லேசர் விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளை தொடர்ந்து அரசு பேருந்துகளில் திருக்குறள் விளக்கத்துடன் பலகைகளை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் அமைக்கும் பணி 10 நாட்களில் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.