செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (11:29 IST)

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை உயர்வு.. தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை..!

Tomato
தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ளதை  அடுத்து  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.  தக்காளி கிலோவுக்கு ரூபாய் 200 வரை விற்பனையாகும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 
 
மேலும் தக்காளி விலையை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran